நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் ஒன்பது இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களுக்கு வேட்பாளரை அறிவித்த என் நிலையில் மயிலாடுதுறைக்கு மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் போட்டியிடலாம் என்று செய்திகள் வந்த நிலையில் உள்ளூரில் அறிமுகம் பெற்ற வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காங்கிரசார் போர்க்கொடி துவக்கினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் பிரவீன் சக்கரவர்த்தியை அறிவிப்பதில் முடிவாக உள்ளதாக செய்தி வெளியான நிலையில் கடும் போட்டியில் அறிமுகம் இல்லாத வேட்பாளரை அறிவிக்க வேண்டாம் என்று திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மயிலாடுதுறை தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவருமான 83 வயதாகும் மணிசங்கர் ஐயர் சீட்டுக்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு சீட்டு அளிப்பதில் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருகிறது. அவருக்கு சீட்டு அளிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பாரதிய ஜனதா கட்சி நாம் தமிழர் கட்சி ஆகிய பிற கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்காத காரணத்தால் திமுக கூடாரம் களையிழந்துள்ளது. இன்றாவது காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவிக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.