சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

சின்னம் இல்லாமல் தனது பரப்புரையை தொடங்கிய தேனி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
வருகின்ற ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களுடைய பரப்புரையை தொடங்கிய வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேமில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தேனி பாராளுமன்ற வேட்பாளர் மதன் ஜெயபால் அவர்கள் ஜான் பென்னிகுவிக்கின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து தன்னுடைய பரப்புரையை தொடங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னதாக பென்னிகுவிக் அவர்களின் திரு உருவச்சிலை முன்பாக நாம் தமிழர் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.மைக் சின்னம் வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதால் எந்த ஒரு சின்னமே இல்லாமல் தேனி பாராளுமன்ற வேட்பாளர் தனது பரப்புரையை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் முல்லைப் பெரியாறு 152 அடி தண்ணீர் தேக்க பாராளுமன்ற வலியுறுத்துவேன், தூய்மையான குடிநீர் வழங்குவதற்கு வழிவகை செய்வேன் கேரளா தமிழக எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு செல்லும் பாதையை தமிழருக்கு பெற்று தருவேன் என்பது போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பு உள்ளதாக தெரிவித்தார்.