BREAKING NEWS

குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்

குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்

குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமியின் மகன் மாரியப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் வீராசாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண நிதி 5 லட்சம் ரூபாயை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாரியப்பன் மனைவி கற்பக லட்சுமியிடம் நிவாரண உதவித் தொகை 5 லட்சம் ரூபாய் வரைவு காசோலையை வழங்கி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தார் அவரது மனைவி கற்பக லட்சுமிக்கு அரசு வேலை வழங்க கோரி கனிமொழி எம்பி இடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்

இந்நிகழ்வில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கழுகுமலை நகர் மன்ற தலைவர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், ஊராட்சி மன்ற தலைவர் இசக்கியம்மாள் உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்

Share this…

CATEGORIES
TAGS