ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.

ஏலகிரி மலையில் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவில் (டிராபிஃக்) போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் இங்கு அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் சுற்றுலா அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
இதனால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியன சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
எனவே, விடுமுறை நாட்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, அனைத்து சுற்றுலாத் தலங்களையும் கண்டு பொழுதுப்போக்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலையைச் சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகளால் கொண்டுவரப்பட்ட வாகனங்கள் திடீரென ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் வரிசைகட்டி நின்றன.
இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் வார விடுமுறை நாட்களிலும் முக்கிய நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளும் அவதியுற்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் சிலர் அடாவடியாக பணம் சம்பாதித்தனர்.
மலையில் உள்ள சில தங்கும் விடுதிகளில் விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சில அதிகாரி (சார்) களுக்கு அங்கெல்லாம் மாமூலாக சலுகைகள் கிடைப்பதால் இந்த சமாச்சாரம் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் தடுக்கப்பட்டு வருகிறதாம்.
ஆகவே இதை நேரடியாக அதிகாரிகளின் பார்வைக்கு புகாராக கொண்டு செல்ல ஒரு அமைப்பு தயாராம்.
இப்படி கொடிகட்டி பறக்கும் விபச்சார தொழிலை தடுக்க வேண்டியவர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக அவர்களே விபச்சார அழகிகளிடம் உல்லாசம் அனுபவித்து வருகின்றனர் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு நேர்மையும், நியாயமும், கண்டிப்பாக நடக்க கூடிய ஐஜி அஸ்ராகார்க் நேரடியாக ஏலகிரி மலைக்கு திடீரென ஒரு விசிட் செய்தால் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.
காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளும் கட்டாயம் சிக்கிக் கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி.
இவரது நடவடிக்கை என்று தொடரும் என்பதுதான் இன்றைய சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகளை நிம்மதியாக எங்கும் செல்ல விடாமல் குறிப்பாக இளைஞர்களை சுற்றி வட்டமடித்து அவர்களை தங்களது வலையில் விழ வைத்து அவர்களிடம் இருந்து ஒரு கணிசமமான தொகையை பறித்துக் கொள்வதில் விபச்சார அழகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வெட்கக்கேடாக உள்ளது.
குறிப்பாக குடும்பத்தோடு செல்லும் சில ஆண்களும் இதில் சிக்கி தவியாய் தவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை மாற, பொதுமக்கள் நிம்மதியாக இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அமைதியான சூழல் நிலவ காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குறிப்பு: திருப்பத்தூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது தர்மேந்திர பிரதாப் யாதவ் என்கின்ற ஒரு கலெக்டர் இருந்தார்.
அவருடைய காலத்தில் தான் ஏலகிரி மலை சூப்பராக டெவலப் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் பராமரிப்பின்றி பாழ்பட்டு சீரழிந்து கிடக்கிறது. முக்கியமாக யாத்திரிநிவாசை உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.
செய்தி ஆசிரியர் ச. வாசுதேவன்