குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக மரம் நடு விழா நடந்தது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அமிர்தவல்லி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் வசந்தி வரவேற்று சுற்றுச்சூழலின் முக்கியத் துவத்தை விளக்கினார்.
சுயதொழில் பயிற்றுநர் பிரம்ம நாயகம் , மற்றும் விலங்கியல் துறை மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர்.
விழாவில் இணை பேராசிரியர் இசக்கியம்மாள் நன்றியுரை கூறினார்.விழாவிற்கான ஏற்பாட்டை விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
CATEGORIES தென்காசி
TAGS கல்விகுற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரிசுற்றுச்சூழல் தினவிழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்