BREAKING NEWS

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது.

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (03-07-2020) இரவு நேர விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனால் விமான ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகிய பணிகளால் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலைய வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக இன்று முதல் இரவு நேர விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த இண்டிகோ விமானம் மாலை 6:20 மணிக்கு தரை இறங்கியது. பின்னர் இரவு 7 மணிக்கு அதே விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான போக்குவரத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS