நாகர்கோவிலில் வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தை சாலையில் ஐம்பது அடி தூரம் இழுத்து சென்ற சொகுசு கார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் கூடன்குளம் அனுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் மகன் பெலிக்ஸ் ராஜ் (36) என்பவர் பணிக்கு செல்வதற்க்காக சென்ற போது டதி பள்ளி சாலையில் இருந்து பார்வதிபுரம் நோக்கி ” போதையில் மின்னல் வேகத்தில் ” வந்த சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் பெலிக்ஸ் ராஜின் இரு சக்கர வாகனத்தில் மோதி சுமார் ” 50 அடி ” தூரத்திற்கு சாலையில் தர, தர , என இழுத்து சென்றது. கார் மோதிய வேகத்தில் ஏற்ப்பட்ட சத்தத்தில் சாலையில் சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்க்கு ஒடி சென்று விபத்தில் பைக்கில் சிக்கிய பெலிக்ஸ் ராஜ்யை பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் சிக்கிய பெலிக்ஸ் ராஜ் ” தலைக்கவசம் ” அணிந்து வாகனம் ஒட்டி வந்ததால் பெரும் உயிர் இழப்பில் இருந்து தப்பினார்.
சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்க்கு நடந்த இந்த சாலை விபத்தினால் சுமார் அரை மணி நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்து வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் விபத்து ஏற்ப்படுத்திய சொகுசு கார், மற்றும் இருசக்கர வாகனத்தை போக்கு வரத்து புலன் ஆய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தார்.
சொகுசு கார் ஒட்டி வந்த நபர் உயர் ரக போதைப்பொருள் உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் என விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் கூறினர்.
இந்த விபத்தை வேடிக்கை பார்த்து நின்ற ஏராளமான பொதுமக்களிடம் விபத்து நடந்த இடத்திலேயே “போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் ஆட்ரின் ” தலைக்கவசம் அணிவதன் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை விளக்கி கூறினார். அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை வெகுவாக பாராட்டினர்.