
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சட்டவிரோதமாக ஸ்கேன் செய்யும் கும்பல்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் ஊடுருவல்! ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் ஸ்கேன் சென்டரை நிறுவி கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து இதன் மூலம் பல கோடிகளை வாரி சுருட்டி வருகிறது.
இதற்கு என்ன டெம்போ ட்ராவலர் வாகனத்தில் ஸ்கேன் கருவிகளை பொருத்தி வாகனங்களை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு திருப்பதி சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து அதன் தகவலை உரியவர்களுக்கு தெரிவித்துவிட்டு தல ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரை வசூல் செய்து விடுகின்றது.
இந்த மாபியா கும்பல் போன்ற கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து கொள்ள யார் யார் ஆர்வம் கொண்டு திரிகின்றனர் என்பதை கண்டறிவதற்காக இரண்டு பெண்கள் உட்பட 32 பேர் தமிழகத்தில் புரோக்கர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு நபரை கொண்டு வந்து இந்த மாபியா கும்பலிடம் காண்பித்தால் அவர்களுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது இதற்கு ஆசைப்பட்டு இந்த புரோக்கர்கள் சில தாய்மார்களை அழைத்து வந்து இந்த மாபியா கும்பலிடம் திருப்பதி மற்றும் சித்தூரில் சேர்த்து விட்டு அவர்களுக்கு தேவையான கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு சென்று விடுகின்றனர்.
தகவல் காரணமாக இந்த சட்ட விரோத ஸ்கேன் கும்பலை தனிப்படை போலீசார் கண்டறிந்து பிரதீப் 25 நாகராஜ் 49 ஆகிய இருவரை கைது செய்துள்ளனர் தற்போது மீதமுள்ள இரண்டு பெண்கள் உட்பட 32 புரோக்கர்களையும் தனிப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எல்லாமே இப்படி இருக்க இந்த ஸ்கேன் மோசடி கும்பலிடம் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தற்கொலை சம்பவத்தை கீழே விரிவாக காணலாம் .
கருவில் வளரும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால், குழந்தையுடன் கர்ப்பிணி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமம், வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமாதேவி(25), மகள் மோகனா (2). இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீயும் கடந்த ஜூன் 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றதில் இருவரும் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உமாதேவி இரண்டாவதாக கருவுற்ற போது அந்த கருவை இந்த சட்டவிரோத ஸ்கேன் கும்பலிடம் ஸ்கேன் செய்து பார்த்தபோது கருவில் இருப்பது பெண் குழந்தை என்று சொன்னதால் தனது குழந்தையுடன் உமா தேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த அதிர்ச்சி தகவலையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை செய்து கொண்ட உமாதேவி மற்றும் அவரது குழந்தையை பிரேத பரிசோதனைக்கு பின் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது உமாதேவி வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. ஆனால் ஸ்கேன் செய்த கும்பல் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று சொன்னதால் உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இப்படி இந்த மோசடி கும்பல் ஆங்காங்கே விவரம் அறியாத பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது. தமிழக போலீசார் தனிப்படை அமைத்து இந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இது போன்ற கும்பலிடம் உஷாராக இருக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்