BREAKING NEWS

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது

அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்றது இதைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடந்தும் குடமுழுக்கு நடத்தப்படாததால் பக்தர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது இதையடுத்துகுடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ரூபாய் 2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பாலாலயத்துடன் சுப்ரமணியசாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடந்தது.

கோவில் முகப்பு பகுதி மற்றும் ராஜ கோபுரம் மூலவர் விமானங்கள் மற்றும் கோவில் உட்பிரகாரங்களில் வர்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தேவசேனா மண்டபத்தின் எதிரே உள்ள யாகசாலை கூடத்தில் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று வரை ஏழு கால பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து காலை 4 மணிக்கு பூரணாகதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் யாகசாலையில் இருந்து பெரிய ரத வீதி வழியாக சன்னதிக்குள் சென்று அங்கிருந்து ராஜகோபுரம் சென்றனர்.

காலை ஐந்து முப்பது மணி அளவில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்ததும் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க ஏழுநிலை கொண்ட ராஜகோபுரத்தின் மீது உள்ள ஏழு கலசங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் கோவர்த்தனாம்பிகை, விநாயகர்,மூலவர் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசாமி தெய்வானை,விநாயகர் துர்க்கை அம்மன் சிலைகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை யுடன் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது.

கும்பாபிஷேகத்தை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்துமீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரப் பெருமாள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர்.இதையடுத்து பக்தர்ள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.95 நாட்களுக்குப் பிறகு மூலஸ்தானம் சென்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானையை பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக நிகழ்வையொட்டி இன்றும் நாளையும் கட்டண தரிசனம் கிடையாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக 2,500 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆங்காங்கே கும்பாபிஷேக நிகழ்ச்சி காண எல் இ டி திரையும் பக்தர்களை கண்காணிக்க எழுவது சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.

விழாவிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை காண மதுரை மட்டுமல்லாத தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS