திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய நடத்தை, தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடா்பாகவும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்தல் மற்றும் திருடுபோன சொத்துகளை விரைவில் பறிமுதல் செய்யும் வழிமுறைகள் குறித்தும்
மேலும், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோா், கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோா் குற்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.