குளறுபடியில் குற்றால சாரல் திருவிழா

தென்காசி சாரல் திருவிழா ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நிலையில் அழைப்பிதழ்களில் நேரம் குறிப்பிடாமல் அவசரகதியில் அச்சிடப்பட்டுள்ளது மேலும் சாரல் விழா நடைபெறும் குற்றாலம் நகரப் பகுதியில் சாலைகள் சரியில்லாமல்,
ஆக்கிரமிப்புகள் அகற்றாமல், சுகாதார சீர்கேடுடன் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமலும்,
மாவட்ட நிர்வாகம் வசூல் செய்து இவ்விழாவை நடத்துவதின் அவசியம் என்ன? எதுவும் முழுமை பெறாமல் பல குறைபாடுகளுடன் இவ்விழா நடக்க அவசியம் என்ன? என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளானர்.
கடந்த காலங்களில் அவசர கதியில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்று உதாரணம் 119 கோடியில் செலவு செய்து காட்சி பொருளா காட்சியளிக்கும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேலும் சாரல் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தவிர வேறு எந்த அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு துறை சார்ந்த அமைச்சர்களும் சாரல் விழாவில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே அப்பகுதியில் பொது இடங்களை சுத்தம் செய்து சாரல் திருவிழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்து பின்னர் சாரல் திருவிழா நடத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.