காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டு வஜ்ரவேல் மலை முருகன் கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சொரக்கால்பட்டு பகுதியில் வஜ்ரவேல் மலை முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த வஜ்ரவேல் மலை மீது சுமார் 200 படிகளை கடந்து சென்று முருகரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வஜ்ரவேல் மலை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அதிகாலையில் நடந்தது.
இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திலும் மற்றும் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு வஜ்ரவேல் மலை முருகர் அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக வருகை தந்து வஜ்ரவேல் மலை முருகரை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
வஜ்ரவேல் மலை முருகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவது உண்டு. அதேபோன்று வஜ்ரவேல் மலையில் பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ வேண்டிய படி வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார் வஜ்ரவேல் மலை முருகர் என்பது ஒரு ஐதீகம்.
ஆதலால் பக்தர்கள் மலையேறிச் சென்று முருகரை தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.