BREAKING NEWS

ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.

ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி.

குற்றால மெயின் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிப்பு… ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி பகுதி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால மெயின் அருவியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று குற்றாலத்தில் சாரல் விழா தொடங்கிய நிலையில் குற்றால மெயின் அருவியில் நீட்டிக்கப்பட்டுள்ள தடையால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் அந்த அருவிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

மெயின் அருவி பகுதியில் போலீசார் பாதுகாப்போடு தடுப்புகள் அமைத்து அருவியில் ஒரு ஓரத்திலாவது சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

CATEGORIES
TAGS