BREAKING NEWS

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார்.

இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ரமேஷூக்கு வாகனங்களை திருடி வந்து கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட கும்பலை வேலைக்கு வைத்துள்ளார் இந்த பலே கில்லாடி.

இந்த பத்து பேர் கொண்ட திருட்டு கும்பல் திருடிக் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை கணியம்பாடி பாரதி நகரில் உள்ள மெக்கானிக் ரமேஷூக்குச் சொந்தமான மூன்று குடோன்களில் இருப்பு வைக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

இதில் சில வாகனங்கள் உள்ளூரிலேயே உதிரிபாகங்களாக விற்பனை செய்யப்படுகிறது. பல வாகனங்கள் லாரிகள் வாயிலாக கணியம்பாடியில் இருந்து ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து அந்த பகுதியில் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார் இந்த ஜெகஜால கில்லாடி ரமேஷ். அத்தோடு நிற்காமல் இரு சக்கர வாகனங்களை கொண்டு வந்து கொடுத்துவிட்டு ரூபாய் ஐம்பதாயிரம் வரை இவர் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது.

ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் கந்து வட்டி கேட்கும் நபர்களிடம் அவர்களது வீட்டை (அ) நிலத்தை ரமேஷ் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டு ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். என்ற தகவலும் கணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது.

இவற்றிற்கெல்லாம் உடந்தையாக செயல்படுபவர் கணியம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன். இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையிலும் ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த மதிவாணன் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துவிட்டு அவரும் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தற்போது புதிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனன் இதுபோன்ற ஜெகஜால கில்லாடிகளை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பொது மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

அத்துடன் இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்கு ஒரு சில செய்தியாளர்களுக்கு வாய்முட்டு எனப்படும் மாமூல் கொடுப்பதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

இதையும் மீறி யாராவது செய்தி வெளியிட்டால் அவர்களை அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அடியாட்களை அழைத்துச் சென்று மிரட்டுவது மற்றும் நாங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறோம் என்று கூறி அந்த நல்லதொரு கட்சியின் பெயரை சேதப்படுத்தி சின்னா பின்னப் படுத்தி கலங்கத்தை கற்பிக்கின்றனர்.

இதுபோன்ற சமூகவிரோதிகள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. தொல். திருமாவளவன் இந்த கட்சியை மிகவும் கஷ்டப்பட்டு நடத்தி வருகிறார்.

அவருக்கு உறுதுணையாக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் செயல்படுகிறார். இப்படி அரசு பணியை இழந்து அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றும் தலைவர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற புல்லுருவிகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது துரதிருஷ்டவசமானது.

இதை அந்த கட்சியின் தலைமை தான் கண்டிக்க வேண்டும் என்கின்றனர் இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். இது ஒரு புறம் இருக்க மெக்கானிக் ரமேஷ் வேலூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் என்பவரது உதவியுடன் சாராயம் கடத்திச் செல்லும் வாகனங்கள் மற்றும் திருட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் விடப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்து இவரது மெக்கானிக் கடையில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதில் காவல் துறையின் நேரடி உதவியுடன் இவர் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து அதனை உதிரி பாகங்களாக மாற்றி விற்பனை செய்வதும், திருட்டு வாகனங்களுக்கு பதிவு எண், சேஸ் நம்பர் மாற்றுவது உள்ளிட்ட பணிகளையும் செய்து அவற்றை விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார் என்றும் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக சாராய வழக்கில் நான்கு வண்டிகள் பிடிபடுகிறது என்றால் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மூன்று இருசக்கர வாகனங்களை இந்த மெக்கானிக் ரமேஷிடம் கொடுத்து விடுகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இதை காவல்நிலையத்தில் கணக்கு காண்பிப்பதில்லையாம். அவர் கொண்டு வந்தத அந்த இருசக்கர வாகனங்களுக்கு ஏதாவது ஒரு நம்பரை பொருத்தி சேஸ் நம்பரை மாற்றி அந்த வாகனங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறாராம்.

இப்படி ஒரு வாகன திருடனுடன் இணைந்து கைகோர்த்து கொண்டு காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் செயல்படுவது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

இது கணியம்பாடியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் தரப்பிலேயே இந்த தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மத்தியிலும் இதே தகவல் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றுவது சேஸ் நம்பரை மாற்றுவது ஆகிய பணிகளுக்கு தலா ஒரு வாகனத்திற்கு ரூபாய் 5000 வசூல் செய்கிறாராம் இந்த மெக்கானிக் ரமேஷ். அதே போன்று திருடப்பட்டு வரும் வாகனங்களை வாங்கி சுமார் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருகிறார் ரமேஷ் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சார்ந்தவர் சிலம்பரசன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாகன தணிக்கையில் கைப்பற்றப்படும் அந்த வாகனங்களையும் இந்த மெக்கானிக் ரமேஷ் கொண்டு வந்து அனைத்தையும் கலந்து விற்பனை செய்வதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

இப்படி இரவு நேரத்தில் ரோந்து செல்லும்போது மணல், மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படும் லாரிகளை நிறுத்தி வசூல் செய்யப்படுகிறது. அப்படி வசூல் செய்யும் போது மாமூல் கறாராக வசூல் செய்யப்படுகிறதாம்.

இதில் புக்கா என்கிற வினோத் மெக்கானிக் ரமேஷூக்கும், சிலம்பரசனுக்கும் வலதுகரமாக செயல்படுகிறார்.

இந்த புக்கா என்கிற வினோத் தன்னுடன் 20 நபர்களை வைத்துக் கொண்டு, ஜேசிபி, லாரி உள்ளிட்டவைகளை வைத்துள்ள நபர்களை கண்டறிந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் தொல்லை செய்கின்றாராம்.

இது போன்ற திருட்டு வாகனங்களை வாங்கிக் கொண்டு பலர் தாலி செயினை பறிப்பது மற்றும் சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் நாம் விசாரித்த தகவல்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

அதாவது புக்கா என்கிற வினோத்துடன் சண்முகம், சூர்யா, அசோக், சீனு உள்ளிட்டவர்கள் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

அனைவரையும் மிரட்டி இந்த கேங் மாமூல் வசூல் செய்வதாகவும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இவற்றுக்கும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் துணை நிற்பதாக கூறப்படுகிறது.

இப்படி பல்வேறு விரும்பத்தகாத செயல்களை வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் தெரிந்தே தைரியமாக குற்றவாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு இணைந்து செயல்படுகிறார் இந்த காவல்துறையில் உள்ள கருப்பு ஆடு சிலம்பரசன்.

இதுகுறித்து செய்திகள் ஏதாவது வெளிவந்தால் அந்த பத்திரிகையின் செய்தி வெளியீட்டாளர் மற்றும் அந்த செய்தியாளர், அந்த செய்தி ஆசிரியர் உள்ளிட்டோருக்கு 4 கோர்ட் நோட்டீஸ் அனுப்பி அவர்களை மிரட்ட பார்க்கிறார் இந்த ஜெகஜால கில்லாடி உதவி ஆய்வாளர் சிலம்பரசன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவ்வாறு செய்தித்துறையின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார், அத்துடன் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்க பார்க்கிறார் இந்த காவல்துறையில் உள்ள கருப்பு ஆடு உதவி ஆய்வாளர் சிலம்பரசன். அத்துடன் இந்த காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தனது அடியாட்களை வைத்து போன் போட்டு அந்த பத்திரிகை அலுவலகத்தில் உள்ள ஆசிரியரை மிரட்டுவது என்று இல்லாத, வேண்டாத பணிகளில் எல்லாம் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு ஒரு அநியாயம் கணியம்பாடியில் தொடர்ந்து நடந்து வருகிறது. சீருடை பணியாளர்கள் தன் இஷ்டம்போல் யார் மீதும் வழக்கு பதிவு செய்ய இயலாது.

அத்துடன் சீருடை பணியாளர்கள் தங்கள் விருப்பம் போல் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி ஏதும் பெறாமல் இது போன்ற கோர்ட் நோட்டீஸ்கள் அனுப்புவது, செய்தியாளர்களை மிரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்து சிலம்பரசன் செய்தி துறையுடன் மோதி விளையாடுகிறார்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு களத்தில் சென்று விசாரணை நடத்தினால் இதில் உள்ளது அனைத்தும் உண்மை என்பது தெரியவரும்.

இதற்கு பிறகு அந்த காவல் உதவி ஆய்வாளர் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் மீது காவல்துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க முன் வருவாரா? என்பதை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இப்படி பெரிய அளவு வாகனங்களை திருடி ஏற்றுமதி செய்யும் கேங் லீடரான மெக்கானிக் ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் உண்மை என தெரியவந்து இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா? அல்லது நடவடிக்கை எடுப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS