குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்
குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ஒரு நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்ததை தொடர்ந்து, இன்று மதியம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தலைமையில் குளச்சல் ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த செயலைத் தடுக்க முயன்ற குமரி டிரஸ்ட் ஆதரவாளர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மோதலின் போது ஃபெரோஸ் என்ற நபர் பலத்த காயமடைந்து, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி தரப்பினர், “மாவட்ட காவல்துறையின் மெத்தன போக்கே நிலைமை இந்தளவிற்கு செல்வதற்குக் காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த மோதலை அடுத்து, குளச்சல் பகுதியில் போலீஸ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.