மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பையை வென்று காட்பாடி மாணவர்கள் சாதனை!

சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி மாணவ, மாணவிகள் வென்று கோப்பையை கைப்பற்றினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயிற்சியாளர் அமுதா அச்சுதன் தலைமையில் கராத்தே பயிற்சியை பெற்று வந்தனர். இந்நிலையில் சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் காட்பாடி செங்குட்டை சத்திரம் பள்ளி பகுதியைச் சேர்ந்த கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வென்று கோப்பைகளை கைப்பற்றினர். அவர்களுக்கு போட்டியின் நடுவர் மாஸ்டர் கோபி சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த போட்டியை செய்சன் கொஜூ ரியூ இன்டர்நேஷனல் மாரிட்டல் ஆர்ட்ஸ் கராத்தே நிறுவனம் மாநில அளவிலான போட்டியை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தது.
போட்டியில் வென்று பரிசுகளையும், கோப்பைகளையும் கைப்பற்றிய மாணவ மாணவிகளுடன் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் அமுதா அச்சுதன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டினார்.