BREAKING NEWS

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு

இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் திரு.பொன்.பால் துரை தலைமை தாங்கினார், கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கன்னியாகுமரி பாராளமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர், விஜய்வசந்த் எம் பி, கலந்து கொண்டு பேசியதாவது ;

தேர்தல் ஆணையம் போட்டோவை பயன்படுத்தி போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர்.

அதேபோல பல இடங்களில் வாக்காளர்களை சேர்த்தும், நீக்கியம் உள்ளனர். இப்படி நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் வேண்டுமென ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் பாஜக-வினர், கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பொய் கூறுகிறார்கள் எனவும் பேசி வருகின்றனர். ஓட்டு நமது அடிப்படை உரிமை, அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது. ராகுல் காந்தி அவர்கள் குரல் கொடுப்பது அவருக்காக அல்ல, நமக்காக பேசி வருகிறார். இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கூறிய போது மத்திய அரசு விவாதிக்க மறுத்துவிட்டது.

தேர்தல் கமிஷனரிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கவில்லை, எல்லா மாவட்ட தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரல் கொடுப்பார்கள் அதேபோல மக்களாகிய நீங்களும் ஏதோ இது ஒரு கட்சி கூட்டம் அல்லது நிகழ்ச்சி என நினைக்காமல் இந்தப் போலி வாக்கு சேர்ப்பதன் பின் விளைவுகள் குறித்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது ஓட்டு உரிமைகளும் போய்விடும், பீகாரை சேர்ந்த ஆறு லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்துள்ளனர்.

அதேபோல 15 லட்சம் பேரை அவர்கள் சேர்க்கும் போது நிலைமை என்ன ஆகும், தமிழகத்தில் இவ்வாறு வாக்காளர்களை சேர்க்கும் போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

நாம் தெளிவாக இருக்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை நம்முடைய பூத்களில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதனை பார்க்க வேண்டும். ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோட யாத்திரை நடந்த போது அவர் நடந்து சென்று விடுவாரா என கேலி செய்தனர்.

எப்படி நடந்து விடுவார் பார்க்கலாம் என கூறினர். அந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த யாத்திரைக காங்கிரஸ் கட்சி மீது மதிப்பும், காங்கிரஸ் கட்சி மீது பற்றுதலும் மக்களுக்கு ஏற்பட்டது. தமிழக அரசு இன்று பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளீர் இலவச பேருந்து பயணம் என்ன பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

எனவே இந்த நல்லாட்சி தொடர நாம் உறுதுணையாக இருப்போம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம் இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், காங்கிரஸ் குமரி கிழக்குமாவட்ட தலைவர் KT.உதயம்,

மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணிமுத்து, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஆண்டனி விஜிலியஸ் உட்பட பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS