தென்காசி அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் வசிக்கும் வீட்டுமனை பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் முன்னணி சார்பில் கிழவநத்தம் பாறையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஏராளமான பொதுமக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் இந்திய ஐக்கிய விவசாய முன்னணி மாநில செயலாளர் முத்துசாமி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் கணேசன், கனகராஜ் மாடசாமி ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
CATEGORIES தென்காசி
TAGS இந்திய கம்யூனிஸ்டு கட்சிஇலவச வீட்டுமனை பட்டாசெங்கோட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்முக்கிய செய்திகள்