BREAKING NEWS

நாமக்கல்லில் மணல் கொள்ளை அடித்தவர்கள் காருடன் தப்பவிட்ட சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்!

நாமக்கல்லில் மணல் கொள்ளை அடித்தவர்கள் காருடன் தப்பவிட்ட சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்!

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐஏஎஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

அதில் பிடிப்பட்டவர்களுக்கு உதவிய விவகாரத்தில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இங்கு அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுகிறது. மணல் திருடர்களை போலீசாரும் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐஏஎஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாருக்கு உத்தரவிட்டத்தின்படி போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

அப்போது கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததும், அதற்கு ஒரு கார் பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து லாரியை அங்கிருந்த போலீசாரையும், காரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் என்பவரையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வர கூடுதல் எஸ்பி கூறிவிட்டு, போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

சிறிது நேரத்தில் லாரி மட்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தது. ஆனால் கார் வரவில்லை. மாறாக காரை ஓட்டி வரச்சொன்ன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மட்டும் போலீஸ் நிலையம் வந்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த கூடுதல் கண்காணிப்பாளர் காரை பற்றி விசாரித்தபோது, ‘கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால், உரிமையாரை எடுத்து வரச்சொல்லிவிட்டு வந்துவிட்டதாக’ சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் கூறியதாக தெரிகிறது.

இதனால், சந்தேகம் அடைந்த கூடுதல் கண்காணிப்பாளர், இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் மற்றும் அதன் உரிமையாளரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தப்பவிட்டதும், அதற்கு ஏட்டு கோவிந்தராஜன் என்பவரும் உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதையடுத்து மணல் கடத்தல் விவகாரத்தில் லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரை தப்பவிட்ட புகாரில் மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் கோவிந்தராஜன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பேரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS