வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ். இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த துணைத் தலைவர் முத்துலட்சுமி குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தினத்தின் சிறப்பு மற்றும் மாண்பு ஆகியவற்றைப் பற்றியும், தேசத் தலைவர்களின் தியாகத்தை பற்றியும் விளக்கி கூறினார் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ். இதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES வேலூர்
TAGS 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்காட்பாடி வட்டம்சுதந்திர தின விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வண்டறந்தாங்கல் ஊராட்சிவண்றாந்தாங்கல்வேலூர்வேலூர் மாவட்டம்