காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன். அப்போது உடன் தலைமையிடத்து மண்டல தாசில்தார் ஜனனி, துணை தாசில்தார்கள் சிவகுமார், துளசிராமன், காட்பாடி தாராபடவேடு பிர்கா வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், இதனைத் தொடர்ந்து சுதந்திரம் தொடர்பான தகவல்களை அங்கு குழுமியிருந்த நில அளவையர் பிரசன்னா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோரிடம் விளக்கி கூறினார். இதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
CATEGORIES வேலூர்
TAGS 79வது சுதந்திர தின விழாகாட்பாடிகாட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்