BREAKING NEWS

பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு

பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது

அதனை இன்று மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை துணை இயக்குனர் செல்வசேகர் மற்றும் வேடசந்தூர் வட்டாட்சியர்
சிக்கந்தர் சுல்தான் ஆகியோர் தலைமையிலான அரசு அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்

மேலும் இந்த ஆலையின் மீது சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல வருடங்களாக மாவட்ட ஆட்சித்துறைக்கும், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர்.

இதனை எதையுமே கருத்தில் கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆலையை இயக்க மறைமுக ஆதரவளித்தும் வந்தது

இந்த செயற்க்கை மணல் தொழிற்சாலை சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஜெயபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் தடையானை பிறப்பித்த பின்பும் அரசியல் பின்பலம் கொண்டவர்கள் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தனர்

இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்னரே நேரில் ஆஜராக கூறி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது

அதன் பிறகு தற்போதைய மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடர் ஆய்வு மேற்கொண்டு பல ஆலைகளை மூடி இருந்தாலும்
அரசியல் பின்பலம் கொண்ட அரசியல் பலம் வாய்ந்த சிலர் மட்டும் இன்றளவும் செயற்க்கை மணல் தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கி கொள்ளை லாபம் பார்த்து வந்தனர்

ஆனால் இது போன்று இன்னும் பல இடங்களில் பல ஆலைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது

இதன் காரணமாக அரசு புறம்போக்கு நிலங்கள் அரசு குளம் குட்டைகள் என புறம்போக்கு நிலங்கள் எங்கு இருந்தாலும் இந்த மணல் மாஃபியா கும்பல் விட்டு வைப்பதில்லை இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பதோடு விவசாயிகளுக்கு கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாழ் படுவதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது

இதற்கு கிராம பொறுப்பாளர்களான கிராம நிர்வாக அலுவலர் கிராம வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் அளவிலான அலுவலர்கள்
இந்த செயற்க்கை மணல் தயாரிப்பு நிர்வாகத்திற்கு உடந்தையாக செயல்படுவது வேதனைக்குரிய விஷயமாகும்

இதுபோன்று ஆலைகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது

CATEGORIES
TAGS