BREAKING NEWS

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில்  கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்..

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் வாலாஜாபேட்டை அடுத்த படியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியான மூர்த்தி என்பவர் வீட்டில் இன்று திடீர் சோதனை நடைபெற்றது.

காலை 10 மணி முதல் தொடர்ந்து 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 3.19 லட்சம் ரூபாய் ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள காரில் அழைத்து சென்றனர்.

CATEGORIES
TAGS