புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பலராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
இதைய டுத்து துளசி மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பலராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்தனர்.
அபிஷேக ஆராதனைகளை ஸ்ரீ சந்தோஷ் ஐயர் மற்றும் சிவக்குமார் ஐயர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் ஜி. மனோகரன் வெகு விமரிசையாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.