BREAKING NEWS

மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை!

மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் கொள்ளை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர் இவர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9-வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை 9- மணிக்குத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த ₹1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை காணவில்லை.

இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையில் திருடிச் சென்றிருக்கலாம் என
கூறப்படுகிறது.

இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி அலுவலகம் அருகே நடந்த இந்த திருட்டுச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS