BREAKING NEWS

உதகை பர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடகா பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

உதகை பர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள கர்நாடகா பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, பாடகி இல்லம் தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் கர்நாடகா பூங்கா அமைந்துள்ளது.

பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தொங்கு பாலம், மலர் அருவி, வண்ண மீன்கள் குளம் உள்ளிட்ட பகுதிகளை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில் கர்நாடகா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

குறிப்பாக பான்சிட்டா, கிலன்சியா, சிலோசியா, பெர்பீனியா, மம்லாஸ், அய்ஸ்டார் கேடஸ், அட்டுரான்சியா, டியூப்ரோஸ் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த வண்ண வண்ண மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குவதை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசிப்பதோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS