காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் கோலாகலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.
முதலில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீனிவாசனுக்கு வாசனை திரவியங்கள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நரசிங்கராயனி பேட், ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலய அர்ச்சகர் ஆர்.பாலாஜி மற்றும் காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய பட்டாச்சாரியார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் ஆகியோர் இணைந்து ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்தனர்.
ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள கயிறுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் பக்த கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.
ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார் கோவில் மேலாளர் முருகன்.