BREAKING NEWS

பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.

பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.

கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாத சாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது

இது தொடர்பாக தென்காசி மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர் சுவாமி ஆலயம் பஞ்ச பூத ஸ்தலத்தில் அக்னி ஸ்தலம். இக்கோவில் பாண்டியர் மன்னர் காலத்தில் பாண்டியர் மன்னரால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவரை சுற்றி பல வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஆலயத்தின் சுற்றுச்சுவரை சுற்றி கட்டிடம் கட்ட வானம் தோண்டப்பட்டுள்ளது. இது ஆலயத்தின் சுற்றுச் சுவரை சுற்றி கட்டிடம் கட்ட முயற்சி நடக்கிறது. இது ஆலய ஆகம விதிகளுக்கும் ஆலயத்தின் பாதுகாப்பிற்கும் பொது மக்களின் போக்குவரத்திற்கும் சுற்றுச்சுவருக்கும் ஆலயத்தின் திருத்தேர் வலம் வருவதற்கு இடையூறாக அமையும். மேலும் இந்த சுற்றுச்சுவரை ஒட்டி நடக்கும் பணியால் ஆலய ராஜகோபுரம் சேதமடையும் சுழல் உள்ளது. எனவே கட்டிடம் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அப்போது தென்காசி மாவட்ட பாஜக துணை தலைவர் சுப்பிரமணியன், புலிக்குட்டி, நகர பாஜக தலைவர் உதயகுமார், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர பெருமாள், கணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS