BREAKING NEWS

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தி.கா. ரமேஷ் தலைமையில் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலை வகித்தார்.

மாவட்ட கௌரவ தலைவர் தாண்டவ மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சம்பத், பாலகிருஷ்ணன், முனுசாமி, நந்தகுமார் ,ரவி, மணி கலந்து கொண்டனர் . மாவட்டத் துணைத் தலைவர் ஜெயபால் வரவேற்றார். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1. 1 .2026 முதல் 8 வது ஊதிய குழு அமைத்து அதன் பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உள்ளது.

அதுபோல தமிழக அரசும் உடனடியாக 8வது ஊதிய குழு அமைத்து 1.1.2026 முதல் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க தமிழக முதல்வரை இந்த செயற்குழு வேண்டுகிறது .தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

மத்திய அரசு 1 .7 .2025 முதல் அகவிலைப்படி வழங்கியுள்ளது. அதுபோல தமிழக அரசும் உடனடியாக வழங்க இந்த செயற்குழு வேண்டுகிறது.

தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவது சம்பந்தமாக தமிழக அரசு நியமித்த குழுவிடம் நமது சங்கத்திற்கும் அழைப்பு வந்ததின் பேரில் நாம் அவர்களை சந்தித்து பழைய ஓய்வு ஊதியம் வழங்க வலியுறுத்துகிறோம்.

மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் ரூபாய் 500 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல அனைத்து பேரூராட்சிகளும் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

தோட்டக்கலைத் துறையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.

தமிழக அரசு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த எந்த சங்கத்தையும் அழைத்து பேசவில்லை.

இனியாவது அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி ஒரு சில சலுகைகளையாவது உடனடியாக வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக மாவட்ட அமைப்பு செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS