BREAKING NEWS

வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்! 

வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்! 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவுற்றதை தொடர்ந்து திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதி மக்களிடம் சாலை எப்படி இருக்கு கேட்டு அறிந்தார்.

அந்த பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக இந்த எம்எல்ஏ செய்யாததை நீங்கள் செய்தீர்கள் என்று நன்றி தெரிவித்தார்கள். இதில் பகுதி செயலாளர் சி. எம். தங்கதுரை, ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், வட்ட கழக செயலாளர் விநாயகம், வார்டு கவுன்சிலர் சுதாகர், எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், மாநகராட்சி அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS