வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் தலைமை வகித்தார்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டனப் பேருரையாற்றினார்.
வேலூர தொகுதி எம். பி., கதிர் ஆனந்த், அவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீல. சந்திரகுமார், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப், காங்கிரஸ் கமிட்டி வேலூர் மாநகர தலைவர் டீக்காராமன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி மற்றும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ஆயிரக்கணக்கான பொது கலந்து கொண்டனர்.
