BREAKING NEWS

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்

தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் காவலூர் ஜவ்வாது மலையில் ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் “ (Vainu Bappu Observatory) பிரதமர் ராஜீவ் காந்தியால்
திறந்துவைக்கப்பட்ட தினம் இன்று.
( 06 ஜனவரி 1986 )

இது புகழ்பெற்ற இந்திய வானியியலாளர் Manali Kallat Vainu Bappu ன் முயற்சியால் உருவாக்கப்பட்டதால், இவர் காலமானபின் இது திறக்கப்பட்டதால் இவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும், வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ தொலைநோக்கி மூலம் இரவில் வானம் எவ்வாறு உள்ளது என காட்டப்படும்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள்:-

வியாழன் (Jupiter) கோளின் நிலவான Ganymede வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியக்குடும்பத்தில் உள்ள யுரேனஸ் (Uranus) கோளைச்சுற்றி வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS