BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே கயத்தாறு நொச்சிகுளத்தில் மற்றும் ஆத்திகுளத்தில் பயணிகள் நிழற்குடையினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள திருமலாபுரம் ஊராட்சி ஒன்றியம் நொச்சிகுளம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் தெற்கு இறந்த குளம் ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்,மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் இராணுவ வீரர் சுப்புராஜ்,அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )