BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

`அவர் சுயேச்சையல்ல, காங்கிரஸ்காரர்; அங்கீகரியுங்கள்’ மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களை ஒதுக்கியது திமுக. இதில் 77வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு கடைசி நேரத்தில் தள்ளுபடியானது. இதனால், வேறு வழியில்லாமல் அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட, ராஜபிரதாபன் என்பவர் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு உலக உருண்டை சின்னத்தில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஓட்டு கேட்டனர். கடைசியில் அவர் வென்றுவிட்டார்.

இருந்தாலும், கை சின்னத்தில் வெற்றிபெற்ற 5 பேர் மட்டுமே காங்கிரஸ் கவுன்சிலராக கருதப்பட்டார்கள். இந்த நிலையில் சுயேச்சை கவுன்சிலர் ராஜபிரதாபன் நேற்று காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், “மதுரை மாநகராட்சி 77வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ராஜபிரதாபன் என்பவருக்கு காங்கிரஸ் கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக அவரது படிவம் 8 மனு நிராகரிக்கப்பட்டு, அவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது ராஜபிரதாபன் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு இருக்கிறார். எனவே, அவரை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினராக அங்கீகாரம் வழங்க வேண்டும்” கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )