மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் போலீஸ் நிலையம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு.

நாகர்கோவிலில் போலீஸ் நிலையம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை நாகர்கோவிலில் போலீஸ் நிலையம் அருகே தேவாலயத்திற்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்
நாகர்கோவில் அருகே ஆசாரி பள்ளத்தை சேர்ந்தவர் மரிய செல்வி ( வயது 70) இவருக்கு திருமணம் ஆகவில்லை ஒவ்வொரு நாளும் காலையில் இவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம் இன்றும் அவர் பிரார்த்தனை செய்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மரிய செல்வியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை அறுத்து விட்டு சென்று விட்டனர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது இதுகுறித்து மரிய செல்வி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார் அவர்கள் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
