BREAKING NEWS

சினிமா

ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகா கேட்ட ஷாக் சம்பளம்.

ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. அங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா, கார்த்தியின் ’சுல்தான்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் அவருக்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், அவர் நடித்த ’புஷ்பா’ படம் இந்தியா முழுவதும் அவருக்கு புகழைக் கொடுத்துள்ளது.

அவர் இப்போது இந்திப் படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி, இப்போது `அனிமல்’ என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட, ராஷ்மிகாவிடம் கேட்டுள்ளனர். ஆட சம்மதித்த ராஷ்மிகா, சம்பளமாக ரூ.2 கோடி கேட்டுள்ளார். இது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்தாலும் அவர் கேட்டதை கொடுத்துவிட்டு ஆட வைக்க இருக்கிறார்கள்.

சமந்தா ’புஷ்பா’ படத்தில் ஆடிய ’ஊ சொல்றியா’ பாடல் ஹிட்டானதை அடுத்து ஒரு பாடலுக்கு ஆட ஹீரோயின்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )