BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் முதல்முறையாக “வரும் முன் காப்போம்” திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் மேயர் சண்.இராமநாதன்.

தஞ்சை மாநகராட்சியில் முதல்முறையாக “வரும் முன் காப்போம்” திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து வழங்கும் பணிகளை ஆய்வு.
மிகச்சிறப்பான இத்திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் 100 ஆண்டுகாலம் வாழவேண்டும் பயனாளிகள் நெகுழ்ச்சி.

தஞ்சை மாநகராட்சி க்குட்பட்ட காவாடிகார த்தெரு பகுதியில் “வரும்முன் காப்போம்” திட்டத்தை மாநகர மேயர் சண்.இராமநாதன் இன்று துவக்கிவைத்தார்.
மாநகர துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி சுகாதார அலுவலர் நமச்சிவாயம், மாமன்ற உறுப்பினர்கள் புண்ணிய மூர்த்தி, பாலசுப்ரமணியன், மருத்துவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் இரத்தபரிசோதனை, இரத்த அழுத்த சோதனை, இ.சி.ஜி. சோதனை செய்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 10, 11 வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தில் தொற்றா நோயாளிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று பெண் சுகாதார தன்னார்வலர்கள் மருந்து வழங்ககவரும் பணிகளை மேயர் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பேட்டி அளித்த பயனாளிகள்.


சர்க்கரை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது சிறப்பான சிகிச்சை பெற்று வீடுகளுக்கே தேடி வந்து மருந்து வழங்கப்படுவது மிகுந்த நிம்மதியை அளிக்கிறது, இத்திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் 100 ஆண்டுகாலம் வாழ்வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் இனி நிரந்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என நெகுழ்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )