மாவட்ட செய்திகள்
SBI வங்கியில் நூதன முறையில் நகை திருட்டு..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கேத்தனூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளர் ஆக சேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அடகு வைக்கும் அனைத்து நகைகளில் இருந்து சிறுசிறு பாகங்களை பிரித்து திருடி உள்ளார் அங்கு வந்த பொதுமக்கள் நகையை மீட்கும் போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவரிடம் இதைப் பற்றி கேட்கும்போது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார் மேலும் வங்கியில் அவருக்கான எந்த ஒரு தண்டனையும் வழங்கப்படவில்லை உடனடியாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவலர்கள் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் இவர் இது போன்று பல நகைகளில் சிறு சிறு துண்டுகள் திருடியது தெரியவந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
