மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி புதுமாரியம்மன் திருக்கோவில் திருவிழா.

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி புதுமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பவானி தெற்கு ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பாக நீர் மோர் மற்றும் பழங்களை மாண்புமிகு முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் பவானி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான K.C. கருப்பணன் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், கவுந்தப்பாடி பவானி தெற்கு ஒன்றிய அவைதலைவர் ஆறுமுகம், மாவட்ட, ஒன்றிய சார்பு அமைப்பு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
