மாவட்ட செய்திகள்
சூரியஒளி மின்சார பண்ணை அமைத்து தருவதாக கூறி ஊரகவளர்ச்சிதுறையில் உதவி இயக்குஞராக பணியாற்றி ஒய்வு பெற்ற முதியவரிடம் 66 லட்சம் வரை நூதன மோசடி.

ஆப்ரிக்கா ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி லாபம் சம்பாதிப்பதாக ஆசை வார்த்தைகாட்டி மோசடி
பணி ஒய்வு பணம் மகனின் சேமிப்புகள் மற்றும் வீட்டுபத்திரம் என அனைத்தையும் கொடுத்துவிட்டு இழந்தவற்றை மீட்டுதர தள்ளாதவயதில் காவல்நிலையத்திற்க்கு அழைந்துகொண்டிருக்கும் 80 வயது முதியவர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசித்துவருபவர் ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குஞராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவரான தட்சினா மூர்த்தி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரிய ஒளியில் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சூரிய ஒளி மின்சார பன்னை அமைத்து வெற்றிகரமாக தொழில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அதே போல் இங்கும் சூரிய ஒளி மின்சார பன்னைகள் அமைத்து அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம் என மோகன்குமார் என்பவர் மின்சார பண்ணை அமைத்து தருபவர் என கனபதி திவஹர் என்பரை தட்சினா மூர்த்தியிடம் அறிமுக படுத்தினார்
10 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்திற்கு 2 கோடி பணத்தை முதலில் முதலீட போட்டுவிட்டு மீத முள்ள பணத்திற்கு கடன் பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளனர் இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி சுமார் 68 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

மின்சாரபண்ணை அமைப்பதாக கூறப்பட்ட பகுதியில் எந்த விதமான பணிகளும் நடைபெறாததால் சந்தேகமடைந்த தட்சினா மூர்த்தி பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்
மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க ரூபாய் இரண்டு லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர்..
மேலும் இந்த புகார் குறித்து இதுவரை வழக்குபதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் இது குறித்து கேட்க சென்றால் மாவட்ட காவல் கண்பானிப்பாளர் அலுவலகத்திற்க்கு செல்ல அறிவுறுத்தியும் அங்கு சென்றால் மீண்டும் உடுமலை காவல்நிலையத்திற்க்கு செல்லவும் கூறிவருகின்றனர்
பணி ஒய்வில் தொழில் மூலல் லாபம் பார்த்து நிம்மதியாக கடைசி காலத்தை கழிக்க நிணைத்து பொய்யான ஆசைவார்த்தைகளை நம்பி அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்க்கார் தட்சினா மூர்த்தி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
