மாவட்ட செய்திகள்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் விஏஓ கைது.

உடுமலை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராமம் விஏஓ அலுவலகம் உள்ளது.இங்கு விஏஓ வாக சூலூர் தாலுகா செஞ்சேரி புத்தூர் சேர்ந்த வேலுச்சாமி (37) பணியாற்றிவருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி யைச் சேர்ந்த ஜெயராமன் (47) தொட்டம் பட்டியில் ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார் அதற்கு பட்டா மாறுதல் செய்ய விஏஓ அலுவலகம் சென்றுள்ளார்.
பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்றால் ரூபாய் 6 ஆயிரத்து 500 லஞ்சம் தரவேண்டும் என வி.ஏ ஓ வேலுச்சாமி கூறியுள்ளார்.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத ஜெயராமன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.
அலுவலகத்தில் விஏஓ வேலுச்சாமி லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் அவரை கைது செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
