BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பேச வாய்ப்பு கோரி அதிமுகவினர் அமளி. முன்னாள் முதல்வர்களே அமளியில் ஈடுபடுவதா என சபாநாயகர் கண்டனம்; அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!!


சென்னை: தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்த தொடங்கினார்.அப்போது பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பளிப்பதாக அதிமுக எம்எல்ஏக்களிடம் உறுதி அளித்தார்.

அத்துடன் பட்ஜெட் உரையை கேட்குமாறு அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். மேலும் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, சட்டமன்றத்தின் மரபை அதிமுக உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும். அதிமுகவினர் கருத்துக்கள் எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது.

இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் தான் தாக்கல் செய்யப்படும் என அறிந்தும் அதிமுகவினர் அமளி செய்வது சரிதானா?.ஏற்கனவே முதலமைச்சர்களாக இருந்த இருவருக்கும் சட்டப்பேரவை நடைமுறைகள் தெரியும், என்றார். சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்த அதிமுகவினர், பட்ஜெட்டை புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )