BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இலங்கை பிரதமர் ராஜபக்சே பேனருக்கு தீ வைத்த தமிழ் பெண்கள்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே பேனருக்கு தீ வைத்த தமிழ் பெண்கள்

போரின் போது பிடித்து செல்லப்பட்ட தங்களது உறவுகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் தமிழர் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது பயணத்தை ரத்து செய்தார் ராஜபக்சே.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் போர் காலக்கட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் காணாமல் போயினர். இவர்களை பல ஆண்டுகளாக உறவினர்கள் தேடிவருவதோடு, போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றார் பிரதமர் மகிந்த ராஜபக்சே. அவரது வருகைக்கு தமிழ் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில், போராட்டம் நடத்தினர். அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் பெண்கள், ராஜபக்சேவுக்காக அமைக்கப்பட்டிருந்த பேனர்கள், பதாகைகளை கிழித்தெறிந்து தீ வைத்து எரித்தனர். போரின்போது காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பெண்கள் வலியுறுத்தினர். தமிழ் மக்களின் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சே தனது பயண திட்டத்தை ரத்து செய்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )