A சித்தூர் வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் பருத்தி பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள என்.நாரையூரில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஏ சித்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி ஆத்மா குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்கியராஜ் வரவேற்புரையாற்றினார். விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் செங்குட்டுவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பருத்தி B15 பண்ணைப்பள்ளி பயிற்சி குறித்தும்,

பருத்தி உழவு அடற்நடவு முறை, மகசூல் பெருக்கம், இயற்கை உரங்கள் இடுதல், தரமான விதைகளை உபயோகித்தல், பருத்தியைத் தாக்கும் அந்துபூச்சிகள் கட்டுப்படுத்த ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார்.
பின்னர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த கோ 17 விதையை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிமுகம் செய்து இது குறித்த செயல்முறைகளையும் தெளிவாக விவசாயிகள் புரியும்படி விளக்கி பேசினார்.
அதன் பின்பு நிகழ்ச்சியின் தலைமை உரையாக ஆத்மா குழு தலைவரும், திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி, கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிற்சி

மேலாண்மை குறித்த பயிற்சி கையேடு, நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆத்மா குழு உறுப்பினர்கள், விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வழிகாட்டுதல் பெற வேளாண் நிலைய அதிகாரிகளோடு தொடர்பிலே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நல்லூர் வேளாண்மை அலுவலர் சிவகாமசுந்தரி தமிழ்நாடு அரசின் கனவு திட்டம் குறித்தும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்களில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,

நல்லூர் ஒன்றியத்தில் ஏ சித்தூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு உட்பட்டு சுமார் 77 கிராமங்கள் உள்ளன அவற்றில் முதற்கட்டமாக 20 கிராமங்களை தன்னிறைவு கிராமங்களாக மாற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும், இதற்கு அரசாங்கம் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது என்றும் விவசாயிகள் இடு பொருட்களை வேளாண் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அப்போது விவசாயிகளும் தங்கள் நிலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றம் குறித்தும், காப்பீடு செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் மேலும் இது போன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கு அதிகாரிகள் உதவுவார்கள் என்றும் தெரிவித்தனர். பின்னர் விவசாயி முனியன் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடிகளை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியை ஆத்மா குழு உறுப்பினர், திமுக கிளைச் செயலாளர் கணல் குணா தொகுத்து வழங்கினார், ஏ சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தின் வேளாண்மை உதவி அலுவலர் பிரியதர்ஷினி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், சரவணன், இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் நிலவழகி, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்,

திமுக ஒன்றிய துணை செயலாளர்கள் அன்புக்குமரன், மாரிமுத்தாள், நல்லூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி இளவரசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தனசேகர், பாபு, கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், செந்தில்குமார், நாகேஷ், ரஜினி, இளங்கோவன், ராஜி, கிளை பிரதிநிதிகள் ஜெயராம், சரவணன், ராஜவேல், அரிஈசன் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
