companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் companio K.S வெல்நெஸ் சென்டர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குத்தாலம் பேரூராட்சி மற்றும் வர்த்தக சங்க பேரமைப்பு, இணைந்து நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெற்று வருகிறது.
இதை குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்.ரோட்டரி சங்க தலைவர் சிவா ராஜலிங்கம்.லயன்ஸ் சங்க தலைவர் மகாலிங்கம், வர்த்தக சங்க பேரமைப்பு தலைவர் சாமி செல்வம், வர்த்தக சங்க பேரமைப்பு கௌரவ தலைவர் பாலச்சந்திரன்,
வர்த்தக சங்க பேரமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம், வர்த்தக சங்க பேரமைப்பு பொருளாளர் சிவகுமார், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் குமார், வர்த்தக அணி நகர துணை செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி இம்முகாமினை தொடங்கி வைத்தனர்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இம்முகாம் சனிக்கிழமை முதல் தொடங்கி 24 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெற இருக்கிறது குத்தாலம் பகுதியைச்சுற்றி உள்ள பொதுமக்கள் இதில் பயன்பெறலாம் எனக் கூறியுள்ளனர்.