NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய ஐந்து முஸ்லிம் நிர்வாகிகளை NIA துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை கண்டித்து இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலியை விடுதலை செய்யக் கோரியும், NIA துறையை கலைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ் டி பி ஐ கட்சியில் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், NIA துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.