TTV தினகரன் பொதுமக்கள் ஒரு சிலருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவருக்கு மூச்சி திணறல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் அருகே அப்ராசபுத்தூர் கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் பார்வையிடவும்,
நிவாரண பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.காலை 11.45 மணிக்கு அப்புராசபுத்தூர் கிராமத்தை பார்வையிட்ட TTV தினகரன் பின்பு பொதுமக்கள் ஒரு சிலருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பொதுமக்கள்
கூட்டம் கூட்டமாக நிவாரண பொருட்களை வாங்க குவிந்தனர். குறைந்த அளவு கண்துடைப்புகாக வாங்கி வைத்திருந்த நிவாரண பொருட்களை கண்டதும் பொதுமக்கள் முண்டி அடித்து கொண்டு வாங்க சென்ற பொழுது செய்வது அறியாது நின்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பொருட்களை மக்கள் மீது வீச தொடங்கினர்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவருக்கு மூச்சி திணறல், மயக்கம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது திட்டமிடாமல் மாவட்ட செயலாளரும் ஒன்றிய செயலாளர்களும் ஏற்பாடு செய்தனர்.
சின்ன கிராமம் கூட்டம் நெரிசல் அதிகம் காட்டுவதற்காக 50பேருக்கு மட்டும் நிவாரண பொருட்களை வாங்கி 1000 பேரை ஏமாற்றுவதர்காக ஏன் இந்த நாடக அரசியல் செய்ய வேண்டும்.
எங்கள் கிராமத்தை அசிங்க படுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய செயலாளர் மோகன் ஆக்கூர்,
பூந்தாழை, அப்ராசபுத்தூர் மக்களை நிவாரண பொருட்கள் என்ற பெயரில் கீழ்தாரமாக நடத்தியதாக நடத்தியதாகவும் பொருட்களை கையில் கொடுக்கக்காமல் தூக்கி விசியும் அக்கட்சியினர் அசிங்கமான அரசியலில் ஈடுப்பட்டது வன்மையான கண்டனத்தை கிராமதின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.