BREAKING NEWS

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம்.  பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில்  கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம்,

அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது.

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கைலாசநாதர் திருக்கோயில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானும் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முனிவர்கள் சிலர் சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்திய போது அவர்களது இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போல சென்ற சிவ பெருமான் மீது முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்ற பலவற்றை யாகத்தில் உருவாக்கி, அவற்றை ஏவி விட்டதாவும் அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்ட சிவ பெருமான், முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டியதாகவும் மனம் திருந்திய முனிவர்கள் ஆணவத்தை விட்டு, சிவ பெருமானிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த காட்சியை உலகத்தவர்களும் காண வேண்டும் என முனிவர்கள் சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்டதன் காரணமாக மார்கழி திருவாதிரை நாளில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப் படுவதாக கூறப்படுகிறது.

 

மேலும், சேந்தனார் என்ற சிவ பக்தன், தினமும் விறகு வெட்டி, விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்ததாகவும் தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்தாதாகவும். ஒரு நாள் மழை பெய்து விறகு முழுவதம் நனைந்து ஈரமானதால், அவற்றை விற்க முடியவில்லை.

 

இதனால் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க முடியவில்லையாம். இதனால் கவலையில் இருந்த சேந்தனாரிடம் சிவனடியார் ஒருவர் வந்து பசிக்கிறது என உணவு கேட்டாராம். வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் சேர்ந்தனாரின் மனைவி, அரிசி மாவு, வெல்லம் சேர்த்து களியும், அதோடு எஞ்சி இருந்த 7 காய்கறிகளை சேர்த்து கூட்டு ஒன்று சமைத்து சிவனடியாருக்கு படைத்தனர்.

 

 

மறுநாள் அந்த ஊர் கோவில் அர்ச்சகர் பூஜைக்காக கோவிலை திறந்த போது, அங்கு களி, காய்கறி கூட்டு சிதறி கிடைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். சேந்தனாரின் பக்தியை சோதிக்க சிவ பெருமானே அடியாராக வந்ததையும் புரிந்து கொண்டார். சேந்தனாரிடம் சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்திய தினமும் இந்த மார்கழி திருவாதிரை என்றும். இதன் நினைவாகவே இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

 

ஆண்டிற்கு ஒரு முறை மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசன விழா நேற்று மாலை சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் துவங்கி விடிய விடிய சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

 

தொடர்ந்து உற்சவர் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. மேலும் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS