அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள திருவுருவ சிலைக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் நகர கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர்,

மானாமதுரை நகராட்சி தலைவர் அவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் நடைபயணமாக வந்து பேரறிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
CATEGORIES சிவகங்கை
