அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து எடப்பாடி அணி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் எடப்பாடி அணி அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,..
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு கூறி கோஷமிட்டு திமுக அரசை கண்டித்து எடப்பாடி அணி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
CATEGORIES அரசியல்
TAGS அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்பெரியகுளம்முக்கிய செய்திகள்மேல்மங்கலம்